சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதுமே மாலையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மட்டும் தான் டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கும். ஆனாலும் காலை 10 மணி முதல் ஒளிபரப்பாகும் இல்லத்தரசிகள் ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்றால் அடுத்த புதிய சீரியல் இறக்கி விடுவார்கள். அப்படித்தான் தற்போது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் மலர் என்ற சீரியல் கடந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
இந்த சீரியலில் முதலில் கீர்த்தி சர்மா ஹீரோயின் ஆக நடித்தார். அதன்பிறகு அவருக்கு பதிலாக அஸ்வதி என்ற கதாநாயகி கமிட்டாகி நடித்தார் .தற்போது இந்த சீரியல் ஆரம்பித்தற்கு கிட்டத்தட்ட 550 எபிசோடுகளை தாண்டிய நிலையில் கிளைமாக்ஸ் காட்சி நெருங்க போகிறது. இதற்கு காரணம் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் பெரிய அளவில் இடம் பிடிக்கவில்லை. இதனால் இந்த சீரியலில் முடியும் நிலைக்கு நெருங்கி விட்டது.
இதனைதயடுத்து இதற்கு பதிலாக பூங்கொடி என்ற சீரியல் ஆரம்பிக்க போகிறது. இதில் பூவா தலையா என்ற சீரியலில் இளமதி என்ற கேரக்டரில் நடித்து வந்த ஸ்வேதா தான் ஹீரோயினாக நடிக்கிறார். அதோடு பாண்டி என்ற கேரக்டரில் நடித்த கதாநாயகன் தான் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்க போகிறாராம்.
இந்த சீரியல் மதியம் செவ்வந்தி அல்லது ஆனந்த ராகம் சீரியலுக்கு பதிலாக வரப்போகிறது. இதனைத் தொடர்ந்து ஆடுகளம் என்ற சசீரியலும் புதிதாக வரப்போகிறது. ஆனால் இந்த சீரியலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாக வேண்டும் என்பதற்காகவே அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆடுகளம் சீரியலை கொண்டு வரப்போகிறார்களாம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…