“2026-ல் ஆட்சி நமக்கு தான்”…. கூண்டோடு திமுகவில் இணையும் முக்கிய புள்ளிகள்… செம குஷியில் ஸ்டாலின்…!

By Nanthini on கார்த்திகை 5, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இபிஎஸ்ஸுக்கு பின்னடைவாக அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவுக்கு தாவி வருகிறார்கள்.  அதிமுக, அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றன. சமீபத்தில் அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களைத் தொடர்ந்து மருது அழகுராஜ், தற்போது மனோஜ் பாண்டியனும் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஓபிஎஸ் உடன் இருக்கும் தஞ்சையை சேர்ந்த முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து முக்கிய புள்ளிகள் திமுகவில் இணைந்து வருவதால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் செம குஷியில் இருப்பதாக கூறப்படுகிறது.