காலையிலயே செம ஷாக்… மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி… பயங்கர குஷியில் எடப்பாடி…!

By Nanthini on கார்த்திகை 6, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவுக்கு ஏராளமான போட்டிகள் இருப்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை நிலை நாட்டுவதில் இபிஎஸ் கவனம் செலுத்தி வருகின்றார். அதேசமயம் கட்சியில் தனக்கு எதிராக போர் கொடி தூக்கும் நிர்வாகிகளையும் மொத்தமாக கட்சியிலிருந்து இபிஎஸ் தூக்கி வீசுகிறார். சமீபத்தில் கூட செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி இருந்தார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தனது கட்சியில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் உள்ள அதிருப்தியாளர்களை அதிமுகவும் திமுகவும் மாறி மாறி தங்கள் வசம் இழுத்து வருகின்றன. சென்னையில் ஓபிஎஸ் அணி, அமமுக நிர்வாகிகள் பலரும் மீண்டும் அதிமுகவுக்கு படை எடுத்துள்ளனர். அந்த வகையில் ராணிப்பேட்டை அதிமுகவில் முக்கிய நபராக வலம் வந்த ரமேஷ் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு தாவியது குறிப்பிடத்தக்கது.