பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் முக்கிய போட்டியாளர்… அடடே இவரா..? இது செம்ம ட்விஸ்டால இருக்கு…! 

By Begam on ஐப்பசி 20, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி  6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசனும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் புதிதாக இரண்டு வீடுகளாக பிரித்து ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என விளையாடி வருகிறார்கள்.

   

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா வெளியேற அடுத்து பாவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார் . கடந்த வாரம் எவிக்ஷன் எதுவும் இல்லை ஆனால் இந்த முறை கட்டாயம் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்படுகின்றது.நேற்று போட்டியாளர்களிடையே ‘ஆக்சிஜன் எமர்ஜென்சி’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டிருந்தது.

   

 

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அதிகம் தாக்கிக் கொண்டனர். விஜய் வர்மாவின் செயல் ரசிகர்களுக்கு அதிக கோபத்தை நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகிறது. அதேபோல நேற்று யுகேந்திரன் நடந்து கொண்ட விதமும் தவறு என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சரியோ தவறோ மனதில் பட்டதை பேசியும், செய்தும் வரும் மாயாவிற்கும் பிரதீப்பிற்கும் பெரும்பாலான ரசிகர்கள் தங்களது  ஆதரவினை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து இந்த வாரம் நிக்சன், அக்‌ஷயா, மணி சந்திரா, விசித்ரா, ஐஸு, விஜய் வர்மா, ப்ரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, விணுஷா, மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் இந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டை விட்டு குறைவான வாக்குகள் பெற்று விணுஷா தான் வெளியேறப்போகிறார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை.