2005ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி, கடந்த 17 ஆண்டுகளில் பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து தனது 33 வயதில் மாபெரும் நடிகையாக உருவெடுத்து நின்று திரையுலகில் கலக்கி வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். குறுகிய காலகட்டத்திலேயே விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இதை தொடர்ந்து அவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தமிழில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தற்பொழுது இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை தமன்னா. நடிகை தமன்னாவும் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக இணையத்தில் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவர்களின் காதல் உறுதியான நிலையில் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என இருவருமே கூறவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் வர்மாவின் தாயும், தமன்னாவின் வருங்கால மாமியாரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமனாவுக்கே டப் கொடுப்பாங்க போலயே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம்…

