“உனக்கெல்லாம் தகுதி இல்ல போ” காதலிக்க மறுத்து துரத்தியடித்த பணிப்பெண்… கூலாக காரில் ஏறிய காதலன்… அந்த சொகுசு காரைப் பார்த்ததும் நடந்த ட்விஸ்ட்..!!

By Soundarya on சித்திரை 13, 2026

Spread the love

சீனாவிலிருந்து பரவி வரும் ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், விமான நிலைய ஓடுபாதையில் (Runway) சாதாரண உடையில் இருக்கும் ஒரு நபர், பணியை முடித்துவிட்டு வரும் விமானப் பணிப்பெண் (Air Hostess) ஒருவரிடம் பூங்கொத்து கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால், அந்த நபர் ஏழ்மையானவர் எனத் தவறாகக் கருதிய அந்தப் பணிப்பெண், அவரது தோற்றத்தை ஏளனம் செய்து, காதலை மிக மோசமாக நிராகரிக்கிறார்.

காதல் நிராகரிக்கப்பட்ட அடுத்த சில வினாடிகளில் நடந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் திகைக்க வைத்தது. அந்த நபரை அழைத்துச் செல்ல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த ‘பென்ட்லி’ (Bentley) கார் ஒன்று அங்கு வந்து நின்றது. சீருடை அணிந்த ஓட்டுநர் காரிலிருந்து இறங்கி, குடை பிடித்து அந்த நபருக்காகக் கதவைத் திறந்துவிட, அவர் எந்த சலனமும் இன்றி காரில் ஏறிச் செல்கிறார். தான் நிராகரித்தது ஒரு சாதாரண நபரை அல்ல, ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரரை என்பதை உணர்ந்த அந்தப் பணிப்பெண், அங்கேயே மண்டியிட்டு அழுது புலம்புகிறார்.

   

   

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இதுதான் உடனடி கர்மாவின் (Instant Karma) சக்தி” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் இது ஒரு விழிப்புணர்வுக்கான நாடகமாக இருக்கலாம் என்று கூறினாலும், “உடையைப் பார்த்து ஒருவரின் தகுதியை எடை போடக்கூடாது” என்ற நல்ல கருத்தை இது சொல்வதாகப் பாராட்டி வருகின்றனர். பணத்திற்காகக் காதலைத் தரம் பிரிக்கும் மனிதர்களுக்கு இது ஒரு நல்ல பாடம் என்று இந்த வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.