BREAKING: அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வருமானவரி சோதனை… பெரும் பரபரப்பு.!!

By Soundarya on சித்திரை 13, 2026

Spread the love

அமைச்சர் சேகர் பாபு மற்றும் அவரது மகன்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகச் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான சாலை கட்டுமான ஒப்பந்த (tender) நிறுவனத்தில் இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் நடத்தப்படும் இந்தச் சோதனையானது, வரவிருக்கும் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படலாம் என்ற புகாரின் அடிப்படையில் நடத்தப்படுவதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சி அமைச்சருக்கு நெருக்கமான இடங்களில் நடத்தப்படும் இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.