தெறிக்க விட்ட ரசிகர்… “அவர் மறைந்தாலும் அன்பு மறையாது…” 30 அடி கட்-அவுட்… கிரேன் மூலம் பாலாபிஷேகம்… கொட்டும் மழையில்… தீயாய் பரவும் வீடியோ…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் துணை முதல்வருமான மறைந்த அஜித் பவாரின் பிறந்தநாளை முன்னிட்டு, புனேவில் உள்ள மார்க்கெட் யார்டு பகுதியில் தொண்டர்கள் அவருக்கு உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர். கொட்டும் கனமழையையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் திரண்ட தொண்டர்கள், அஜித் பவாரின் 30 அடி உயர பிரம்மாண்ட கட்-அவுட்டிற்கு கிரேன் உதவியுடன் பாலாபிஷேகம் (துக்தாபிஷேகம்) செய்தனர். இந்த பாலாபிஷேக நிகழ்வை இளைஞர் அணி துணைத் தலைவர் கரண் கெய்க்வாட் தலைமை தாங்கி நடத்தினார். கடந்த ஜனவரி 28, 2026 அன்று விமான விபத்தில் அவர் காலமான பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால், தொண்டர்கள் இதனை மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/VaradBhatkhande/status/2079829239256461498/photo/1

   

அஜித் பவாரின் பிறந்தநாளை முன்னிட்டு மகாராஷ்டிர அரசு ஜூலை 22-ஆம் தேதியை அதிகாரப்பூர்வமாக ‘அஜித் பவார் ஜெயந்தி’யாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், அஜித் பவார் நினைவாக ஏழை விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் சார்பில் இத்தினம் ‘மக்கள் சேவை வாரமாக’ (ஜனசேவா சப்தா) அறிவிக்கப்பட்டு, இலவச மருத்துவ முகாம்கள், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் புகைப்படக் கண்காட்சிகள் என மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.