பழிவாங்க இப்படி ஒரு வழியா?… திருமணத்தை மறுத்ததால் எச்.ஐ.வி ரத்தத்தை ஊசி மூலம் ஏற்றிய காதலன்.. ஒரு பெண்ணின் பரிதாப முடிவு…!!!

By Rajeshwari on சித்திரை 11, 2026

Spread the love

ஹைதராபாத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணுக்கு, எச்.ஐ.வி தொற்றியுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். ஹைதராபாத்தின் போச்சாரம் ஐடி காரிடார் காவல் எல்லைக்குட்பட்ட அனோஜிகுடா பகுதியைச் சேர்ந்த மனோகர் என்ற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெரியவர்களால் பேசப்பட்டது.

இருப்பினும், மனோகரின் பெற்றோர் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருந்ததால், சந்தேகம் அடைந்த பெண்ணின் தந்தை மனோகருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யச் சொன்னார். அதில் மனோகருக்கும் எச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்தப் பெண் இந்தத் திருமணத்தை நிராகரித்தார்.

   

இதனால் ஆத்திரமடைந்த மனோகர், கடந்த மார்ச் மாதம் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, தனது உடலில் இருந்து எடுத்த எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தத்தை ஒரு சிரிஞ்ச் மூலம் அப்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக ஊசி போட்டு ஏற்றியுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மனோகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

   

ஆனால், இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு அப்பெண் கடும் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளார். இதன் விளைவாக, ஏப்ரல் 10-ம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.