அதிமுகவுக்கு ‘டாட்டா’ காட்டிய ராமராஜன்… ஒரே ஒரு படத்தால் மாறிய அரசியல் கணக்கு… ஆடிப்போன அரசியல் வட்டாரம்…!!!

By Rajeshwari on சித்திரை 11, 2026

Spread the love

தமிழக அரசியலில் ‘மக்கள் நாயகன்’ என்று போற்றப்படும் நடிகர் ராமராஜன், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் முன்னாள் எம்பியாகவும் அறியப்பட்டவர். ஆனால், தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் விபினுக்கு ஆதரவாக அவர் களம் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அதிமுகவின் தீவிர விசுவாசியாக இருந்த ராமராஜன், அக்கட்சியின் தலைமை தன்னை முறையாகக் கண்டுகொள்ளவில்லை என்ற அதிருப்தியில் இருந்த நிலையில், தற்போது விஜய் தலைமையிலான தவெக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

   

இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் ஒரு முக்கியமான உணர்ச்சிகரமான காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ராமராஜன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்த ‘சாமானியன்’ திரைப்படம் வெளியான சமயத்தில், சில சிக்கல்களால் அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

   

அப்போது விபினின் தந்தை வைகுண்டராஜா, தனது திரையரங்குகளில் அத்திரைப்படத்தை நீண்ட நாட்கள் ஓடவிட்டு ராமராஜனுக்குப் பேருதவி புரிந்துள்ளார். அந்த நன்றிக்கடனைத் தீர்ப்பதற்காகவே, தற்போது விபினுக்காகத் தேர்தல் களத்தில் ராமராஜன் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இது அதிமுகவின் வாக்கு வங்கியில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.