சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் (Khairagarh) மாவட்டத்தில் உள்ள தெல்கடி (Thelgadi) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூபா சாஹு (21) என்ற இளம்பெண், தனது காதலன் ஆனந்த் வர்மா (24) என்பவரால் தலையை நசுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 3-4 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், ரூபா திருமணத்திற்கு வற்புறுத்தியதே இந்தக் கொலைக்குக் காரணமாக அமைந்ததாகத் தெரிகிறது.
கடந்த ஜனவரி 25-ம் தேதி மாலை, இருவரும் பைக்கில் அணைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார்கள். அப்போது திருமணம் செய்துகொள்ளுமாறு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஆனந்த், ரூபாவைத் தாக்கி மயக்கமடையச் செய்து, பின்னர் கல்லால் அவரது தலையைத் தொடர்ந்து நசுக்கிக் கொன்றுள்ளார். குற்றத்தை மறைக்க ரூபாவின் உடலில் கல்லைக் கட்டி அணையில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார். ஜனவரி 26-ம் தேதி அணையில் உடல் மிதப்பதைக் கண்ட கைராகர் காவல்துறையினர், அருகிலிருந்த ரூபாவின் பையில் இருந்த ஆதார் அட்டையை வைத்து அவரது அடையாளத்தை உறுதி செய்தனர்.
