உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், மல்கன் ரயில்வே கிராசிங்கில் லோகோ பைலட் ஒருவர் சரக்கு ரயிலை சுமார் 10 நிமிடங்கள் நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான இந்த லெவல் கிராசிங்கில் திடீரென ரயில் நிறுத்தப்பட்டதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
<
उत्तर प्रदेश के रायबरेली में सिगरेट लेने के लिए लोको पायलट ने मालगाड़ी ट्रेन रोक दी। 10 मिनट तक ट्रेन रुकी रही जिसकी वजह से क्रॉसिंग पर जाम लग गया। हालांकि रेलवे अधिकारियों ने इस आरोप को खारिज करते हुए सिग्नल समस्या को रुकावट का कारण बताया है। pic.twitter.com/yade9tqcBg
— Bhadohi Wallah (@Mithileshdhar) December 22, 2025
/div>
திட்டமிடப்படாத இந்த ரயில் நிறுத்தத்தைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வீடியோவில், ரேபரேலி மாவட்டத்தின் ஒரு பகுதியில் நீண்ட சரக்கு ரயில் குறுக்கே நின்று வாகனப் போக்குவரத்தைத் தடுத்துள்ளதைக் காண முடிகிறது. முறையான காரணமின்றி ரயில் நிறுத்தப்பட்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். லோகோ பைலட் எதற்காக ரயிலை நிறுத்தினார் என்பதைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில ஊடகத் தகவல்களின்படி, அந்த ஓட்டுநர் அருகிலுள்ள கடையில் சிகரெட் வாங்குவதற்காகவே ரயிலை நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல் இதுவரை ரயில்வே அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை
