அதிகாலைப் பொழுதில் அந்தச் சிறுமி சுடுகாட்டிற்குச் சென்றாள். தன் தாயின் கல்லறைக்கு முன்னால் தனது பள்ளிப் பையை வைத்துவிட்டு, சில்லிட்ட தரையில் மௌனமாக அமர்ந்தாள். கண்கள் கண்ணீரால் ததும்ப, “அம்மா… நேரமாகிவிட்டது, இனிமேலாவது எழுந்து வா…” என்று மெல்லிய குரலில் தன் தாயை அழைக்கத் தொடங்கினாள்.
“அம்மா, இன்று எனது ஆசிரியை உன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார். நான் வீட்டுப்பாடம் செய்வதில்லை என்றும், எனது ஆடைகள் எப்போதும் அழுக்காக இருப்பதாகவும், என்னைக் கவனிக்க யாரும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். ஆனால் அது உண்மையில்லை என்று அவரிடம் நீயே வந்து சொல்லிவிடு அம்மா. நீ யார் என்றும், என் மேல் நீ வைத்திருந்த அளவற்ற அன்பைப் பற்றியும் அவரிடம் எடுத்துச் சொல்” என்று விம்மினாள்.
One morning, a young girl went to the cemetery.
She placed her backpack in front of her mother’s grave, sat quietly on the cold ground, and with tears filling her eyes, whispered:
“Mom… it’s late. It’s time to wake up.
Today my teacher wants to speak with you.
She says I… pic.twitter.com/F33h4OWsgR
— Patricia (@PatriciaJa1621) March 17, 2026
“நீ இல்லாத இந்த வாழ்க்கை, சூரியன் இல்லாத பகல் பொழுதைப் போல இருக்கிறது அம்மா. நீ என்னைப் பிரிந்து சென்றது முதல், என் மனதிற்குள் உறைந்து கிடக்கும் அந்த கடும் குளிரும் சோகமும் இன்னும் நீங்கவே இல்லை” என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். அந்தப் பிஞ்சு மனதின் அழுகுரல் அங்கிருந்த அமைதியைக் கிழிப்பது போல இருந்தது.
