என்னமா இப்படி பண்றிங்களேமா… ரயில் ஜன்னலுக்கு வெளியே… தொங்கிய சிறுமியின் கால்கள்… பெற்றோர் செய்த விபரீத அலட்சியம்…! நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ…!”

By Swetha on ஆடி 17, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோவில், ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒரு ரயிலின் ஜன்னல் ஓரத்தில் சிறுமி ஒருத்தி அமர்ந்திருக்கிறாள். அதிர்ச்சியூட்டும் விதமாக, அந்தச் சிறுமியின் இரண்டு கால்களும் ஜன்னலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் அவளது ஒரு கையும் லேசாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. குழந்தையைப் பொறுப்பற்ற முறையில் ஜன்னலில் அமர வைத்த பெற்றோரின் இந்த அலட்சியமான செயல் பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிறிய தவறு கூட ரயிலில் பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில், குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அவளது பெற்றோரை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், அதே ரயில் பெட்டியின் அவசரக் கால ஜன்னல் வழியாக மற்றொரு பயணி ஆபத்தான முறையில் வெளியே குனிந்து கொண்டிருப்பதும் நெட்டிசன்களின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

   

ரயில் பயணத்தின் போது உடலின் எந்தப் பகுதியையும் ஜன்னல் அல்லது கதவுக்கு வெளியே நீட்டக் கூடாது என்று ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. ரயில் இயங்கிக் கொண்டிருக்கும் போதோ அல்லது எதிரே மற்றொரு ரயில் கடந்து செல்லும் போதோ இது போன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தாய் முடியும். எனவே, ரயிலில் பயணிக்கும் போது குழந்தைகள் ஆபத்தை உணராமல் விளையாடக்கூடும் என்பதால், பெற்றோர்கள் எப்போதும் விழிப்புடனும் கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று இந்த வீடியோவின் வாயிலாக வலியுறுத்தப்படுகிறது.