அச்சச்சோ என்னாச்சு.. தி லெஜன்ட் பட நடிகைக்கு ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை..!

By Mahalakshmi on ஜூலை 10, 2024

Spread the love

தி லெஜன்ட் பட நடிகை ஊர்வசி ரவுதெலாவுக்கு படப்பிடிப்பு தளத்தில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்வசி ரவுத்தெல்லா பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வருபவர். இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் திவா யூனிவர்ஸ் பட்டம் வென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் பல பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபல மாடல்களாக வளம் வருகின்றார். பல ஹிந்தி திரைப்படங்களிலும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

   

   

கவர்ச்சிக்கு பேர் போன ஊர்வசி ரவுத்தெல்லா தமிழ் சினிமாவில் அறிமுகமானது தி லெஜன்ட் திரைப்படத்தில் தான். இந்த திரைப்படத்தில் தொழிலதிபர் சரவணன் உடன் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் வெளியாகி பலவிதமான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தை ஜேடி ஜெர்சி ஆகியோர் இயக்கியிருந்தார்கள்.

 

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விவேக், விஜயகுமார், சுமன், யோகி பாபு ,ரோபோ சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் சரவணனை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இவருக்கு 20 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஊர்வசி ரவுத்தெல்லா அவ்வப்போது தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது சினிமாவில் மிகவும் கவனம் செலுத்தி வரும் இவர் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா நடிக்கும் 109 வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை பாபி இயக்குகின்றார். மேலும் ஊர்வசி ரவுத்தெல்லா, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடிக்கின்றார்கள்.

ஹைதராபாத்தில் இப்படத்தின் சண்டைக் காட்சி நடந்து வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஊர்வசிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள்.