Connect with us

தமிழ் சினிமாவில் அதிக நேரம் ஓடும் படங்கள்.. நம்பர் 1 இடத்தில் இருக்கும் இயக்குனர் சேரனின் படம்..!!

CINEMA

தமிழ் சினிமாவில் அதிக நேரம் ஓடும் படங்கள்.. நம்பர் 1 இடத்தில் இருக்கும் இயக்குனர் சேரனின் படம்..!!

தமிழ் சினிமாவில் அதிக நேரம் ஓடும் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சங்கர் இயக்கினார். மணிவண்ணன், விவேக், ஸ்ரேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 3 மணி நேரம் 7 நிமிடம் ஓடும். அடுத்ததாக சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சிவாஜியில் சொன்ன கதையே வேறு.. சாலமன் பாப்பையா இப்போ நடிக்காததற்கு காரணம்?  ராஜா சொன்ன விளக்கம் | Actor Raja Explains Why Solomon Papaya Didn't Act  After Sivaji - Tamil Oneindia

இந்தியன் திரைப்படம் 3 மணி நேரம் 4 நிமிடம் நீளம் உடையது. அடுத்ததாக விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சதா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடும். கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு தசாவதாரம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார்.

   

இந்தியன்' வெளியாகி 24 ஆண்டுகள்: ஊழல் எதிர்ப்பு திரைப்படங்களின் பிரம்மாண்ட  முன்னோடி | indian movie special - hindutamil.in

 

இந்த திரைப்படம் 3 மணி நேரம் 4 நிமிடம் ஓடும். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் திரைப்படம் 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஜீவா ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 3 மணி நேரம் 8 நிமிடம் நீளமுடையது. கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கௌதமி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாபநாசம் படம் 2 மணி நேரம் 58 நிமிடம் நீளமுடையது. அடுத்ததாக குடும்ப உறவுகளின் சிறப்பை மையமாக வைத்து தவமாய் தவமிருந்து படம் எடுக்கப்பட்டது.

Vikram's Anniyan film remake In Hindi | விக்ரமின் 'அந்நியன்' இந்தியில்  'ரீமேக்'

இந்த படம் 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்குனர் சேரன் இயக்கியுள்ளார். இது 3 மணி நேரம் 24 நிமிடம் ஓடும். கார்த்தி நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த 2019-ரிலீஸ் ஆனது. இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். இந்த படம் 3 மணி நேரம் 1 நிமிடம் நீளம் உடையது. அடுத்ததாக கடந்த 2000 ஆண்டு ஹேராம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கமல்ஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 3 மணி நேரம் 12 நிமிடம் நீளமுடையது.

ஏழை தகப்பன்களின் தியாகங்களின் சாட்சியாய் 'தவமாய் தவமிருந்து...' | Father's  Day Special | Thavamai Thavamirundhu on Fathers Day - hindutamil.in

author avatar
Priya Ram
Continue Reading
To Top