ரஜினிகாந்த் நடிக்கும் 175வது படம், சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – அந்த 2 பேரில் ரஜினி ஓகே செய்யப் போவது யாரை?

By Elango on மார்கழி 30, 2025

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி கமிட் ஆனதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இதையடுத்து ரஜினி கமல் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளது, அத்துடன் ரஜினி நடிக்கும் அவரது அடுத்த படம் அதாவது 175வது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தையும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத் அல்லது வீரதீர சூரன் பட இயக்குனர் அருண்குமார் ஆகிய 2 பேரில் ஒருவர் இயக்க வாய்ப்புள்ளது. அவர்கள் இருவரும் ரஜினியிடம் கதை சொன்ன பிறகு 2 பேரில் ஒருவரை ரஜினி ஓகே செய்ய இருக்கிறார்.