Categories: சினிமா

தங்கத்தட்டில் சாப்பிட்ட ஒரே நடிகர்.. கடைசியில் இப்படி ஒரு அவலமா..? தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த பரிதாபம்..

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகராகி விட்டால், அதுவும் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டால் சில நடிகர்கள் செய்யும் அலப்பரைகளை பார்த்தால் இது எல்லாம் எத்தனை காலத்துக்கு என்றுதான் கேட்கத் தோன்றும். அந்த வார்த்தையின் உண்மையை உணர்த்தும் விதமாக, செய்யாறு பாலு சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார். அதில் செய்யாறு பாலு கூறியதாவது, இது 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தமிழ் சினிமாவில் அப்போதைய முதல் சூப்பர் ஸ்டார் அவர்தான். புகழின் உச்சியில் இருந்தார். தஞ்சாவூரில் நடந்த ஒரு விழாவில் அவருக்கு வெல்வெட்டில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். தங்க தட்டில் உள்ள உணவை, வெள்ளித் ஸ்பூனில்தான் சாப்பிடுவார். பன்னீரில்தான் வாய் கொப்பளிப்பார். பன்ணீரில்தான் குளிப்பார்.

அப்படி செல்வாக்காக வாழ்ந்த அவரது வாழ்க்கையில் ஒரு மோசமான கட்டத்தில், ஒரு வழக்கில் சிக்கி அவரது வாழ்க்கையே சின்னாபின்னமாகி விட்டது. மிகவும் வறுமை நிலைக்கு வந்துவிட்டார். தங்குவதற்கு வீடு கூட இல்லை. இவரது வறுமை நிலையை பார்த்து, அவருடன் முன்பு நடித்த ஒரு காமெடி ஜூனியர் நடிகர் அவரது ஒரு வீட்டில் தங்கிக்கொள்ளுமாறு சாவி கொடுத்துள்ளார். அந்த காமெடி நடிகருக்கு சொந்தமாக பல வீடுகள் இருந்த நிலையில், இதை உங்க சொந்த வீடுபோல எத்தனை காலமானாலும் இருங்கள். இந்த வீட்டையே உங்களுக்கு கிரையம் வேண்டுமானாலும் செய்து தருகிறேன் என்றும் காமெடி நடிகர் கூறியிருக்கிறார். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு, அந்த வீட்டில் வாடகை தராமல் ஓசியில் இருப்பதற்கு விரும்பாத அவர், அந்த காமெடி நடிகரிடம் சாவியை திரும்ப கொடுத்துவிட்டு, தஞ்சாவூர் வந்துவிட்டார். அப்போது அவரது உடல் நலமும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது.

அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் முன் இருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டார். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அங்கிருந்த சிலர் அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள், சென்னையில் உள்ள சென்ட்ரல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறிவிட்டனர். உடனடியாக அவர் சென்னையில் உள்ள ஜி.எச்சில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது தம்பி வந்து அவரை கவனித்துக்கொண்டார். அப்போது தனது தம்பியிடம் அந்த நடிகர் ஒரு சத்தியம் கேட்டார்.

அது, நான் இறந்துவிட்டால், இந்த சினிமாக்காரர்களிடம் உடலை ஒப்படைத்து விடாதே என்று சத்தியம் வாங்கி விட்டார். அதே போல் சில நாட்களில் அவர் இறந்துவிட, அவரது உடலை சொந்த ஊரான திருச்சிக்கு, உடலை ஆம்புலன்ஸ்சில் கொண்டு சென்றனர். தகவலறிந்து அந்த ஆம்புலன்ஸ்சை காரில் துரத்திச் சென்ற நடிகர்கள் எஸ்எஸ் ஆர், முத்துராமன் போன்றவர்கள் செங்கல்பட்டு பகுதியில், ஆம்புலன்ஸ்சை வழிமறித்து நிறுத்தினர். அப்போது, என் அண்ணன் இப்படி ஒரு சத்தியம் வாங்கிவிட்டார். அதை மீறி அவரது உடலை நீங்கள் எடுத்துச் சென்றால் அவரது ஆன்மா சாந்தி அடையாது என்று தம்பி கூற, அவர்கள் ஒதுங்கி வழிவிட்டு விட்டனர். மறைந்த அந்த நடிகர் தியாகராஜ பாகவதர். தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் வாழ்க்கையே கடைசியில் அப்படித்தான் முடிந்தது என கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

admin

Recent Posts

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! த்ரிஷா கொடுத்த அதிரடி குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…

5 minutes ago

விலை போனதா மனிதநேயம்..? துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்ட சமையல் கலைஞர் – வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த நண்பர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…

8 minutes ago

நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ..? தாய் கேட்ட அந்த கேள்வி… குழந்தை சொன்ன உருக்கமான பதில்… கியூட் வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…

31 minutes ago

BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…

34 minutes ago

போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…

51 minutes ago

“சுற்றுச்சுவர் இல்லை.. கழிவறை இல்லை” அதனால் பெண் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை… அரசுப் பள்ளியின் விசித்திரக் காரணத்தால் வெடித்த சர்ச்சை..!!

பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…

54 minutes ago