எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வைத்த முக்கிய டிமாண்ட்..? – தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

Spread the love

சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்துப் பேசப்பட்ட நிலையில், பாஜக தரப்பிலிருந்து சில அதிரடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, வெற்றிபெற்றால் தமிழகத்தில் ‘கூட்டணி ஆட்சி’ அமைக்கப்பட வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவையில் பாஜகவிற்கு 3 முக்கிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அமித்ஷா கோரியதாகக் கூறப்படுகிறது.

பாஜக தரப்பு குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட முக்கியமான இலாகாக்களைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விருப்பப் பட்டியலில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிசாமி அந்த இடத்திலேயே எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனம் காத்ததாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக தனது ‘ஒற்றைத் தலைமை’ மற்றும் ‘தனிப் பெரும்பான்மை’ கொள்கையில் உறுதியாக உள்ள நிலையில், டெல்லியின் இந்த டிமாண்ட் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

7 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

13 minutes ago

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

32 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

36 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

44 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

49 minutes ago