தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய், தற்போது திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், ஒரு காலத்தில் அவருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் இடையே நடந்த சுவாரசியமான மோதல் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு விஜய் நடித்த ‘சுறா’ படத்தின் விளம்பர போஸ்டர்களில், அவரது பெயருக்குக் கீழே ‘தி லீடர்’ (The Leader) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. தியேட்டர் ஒன்றில் இதைப் பார்த்த கருணாநிதி, “இவர் தலைவரா? அப்போ நான் யார்?” என்று கோபமாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் அறிந்த விஜய், கருணாநிதியின் கோபத்திற்கு ஆளாக விரும்பாமல் உடனடியாகப் பதறியுள்ளார். படத்தின் விளம்பரங்களில் இருந்து ‘தி லீடர்’ என்ற வாசகத்தைத் தூக்குமாறு தனது படக்குழுவினருக்கு அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆரம்பத்தில் படக்குழுவினர் மறுத்தாலும், கருணாநிதியின் அதிருப்தியைச் சமாளிக்க அந்த வாசகத்தைச் சில நாட்களில் நீக்கிவிட்டார்களாம். தற்போது ஸ்டாலினையும் திமுகவையும் துணிச்சலாக எதிர்க்கும் விஜய், அன்று கருணாநிதிக்கு பயந்து பின்வாங்கிய பழைய சம்பவம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, திமுக தலைமையிலான…
குரு பகவான் இன்று அதிகாலை புனர்பூச நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இதனால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு…
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…