கோவை மாவட்டத்தில் அதிமுகவின் நீண்டகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, திமுக சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். கடந்த 2021 தேர்தலில் கோவையின் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றிய நிலையில், இந்த முறை குறைந்தது 5 இடங்களையாவது திமுக பக்கம் கொண்டு வருவோம் என அவர் தலைமைக்கு உறுதி அளித்துள்ளார். குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் முகாமிட்டுள்ள அவர், கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களைத் தொடர்ச்சியாகக் களமிறக்கி அதிமுகவினரைத் திகைக்க வைத்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தின் பலம் வாய்ந்த கொங்கு மண்டலத்தில், திமுகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க செந்தில் பாலாஜி தொகுதி வாரியாக நுணுக்கமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். பண விநியோகம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதில் அதிமுகவை விட இருமடங்கு வேகம் காட்டத் தயாராகி வருவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. செந்தில் பாலாஜியின் இந்தத் தீவிரமான செயல்பாடுகளால் தங்களது கோட்டை சரியுமோ என்ற அச்சத்தில் அதிமுகவினர் உள்ள நிலையில், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு கோவையின் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கும்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…