“பேசாம மூட்டை கட்டிடுவோம்” குடிகாரக் கணவனைச் சமாளிக்க மனைவி கண்டுபிடித்த நூதன வழி.. இணையத்தை அதிரவைத்த வீடியோ…!!

By Soundarya on பங்குனி 14, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மது போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்த கணவருக்கு அவரது மனைவி கொடுத்த ‘அதிர்ச்சி வைத்தியம்’ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக கணவன் குடித்துவிட்டு வந்தால் சண்டையிடும் மனைவிகளுக்கு மத்தியில், இந்தப் பெண் கையாண்ட விதம் வித்தியாசமாக இருந்தது.

அந்த வீடியோவில், போதையில் நடக்க முடியாமல் தரையில் அமர்ந்திருந்த கணவனை, அந்தப் பெண் சற்றும் கோபப்படாமல் ஒரு பெரிய பிளாஸ்டிக் கவரில் (சாக்கு போன்ற பையில்) வைத்து மூட்டை கட்டுவது போலக் கட்டினார். பின்னர், அவரை அப்படியே தரையில் இழுத்துச் சென்று வீட்டின் உள்ளே கொண்டு சென்றார்.

   

   

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “குடிகாரக் கணவனைச் சமாளிக்க இது ஒரு நல்ல வழி” என்று சிலர் வேடிக்கையாகக் கூறினாலும், இன்னும் சிலர் அந்தப் பெண்ணின் பொறுமையையும் சமயோசித புத்தியையும் பாராட்டி வருகின்றனர்.