BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது… சவரனுக்கு ரூ.2,880 சரிவு… நகைப்பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!

By Nanthini on பங்குனி 14, 2026

Spread the love

தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது நகைப் பிரியர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மட்டும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080-க்கும், கிராமுக்கு ரூ140 குறைந்து ₹14,760-க்கும் விற்பனையாகிறது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2,880 சரிந்திருப்பது, தங்கத்தை முதலீடாகக் கருதுபவர்களுக்கும், நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. சர்வதேசச் சந்தையின் மாற்றங்கள் மற்றும் பல்வேறு பொருளாதார காரணிகளால் ஏற்பட்டுள்ள இந்த விலை குறைவு, நீண்ட நாட்களாகக் காத்திருந்த வாடிக்கையாளர்களை நகைக்கடைகளை நோக்கி ஈர்த்துள்ளது.