“அவர் என் பக்கத்தில் படுக்க” ரயிலில் அதிகாலை 4 மணிக்கு நடந்த சம்பவம்… இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஐப்பசி 14, 2025

Spread the love

கேரளாவில் இருந்து வாரணாசிக்கு முதன்முறையாக ரயிலில் பயணம் மேற்கொண்ட ஒரு இளம் பெண் கூட்டல் நெரிசல் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணிகள் அமர்ந்திருக்கும் கடுமையான  தருணத்தின் போது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். ரயில் வட மாநிலங்களுக்குள் நுழைந்ததும் பல பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறத் தொடங்கினார்கள். இரண்டு நாள் பயணத்திற்காக தான் தன்னுடைய இருக்கையை முன் பதிவு செய்ததாகவும், அதில் தான் படுத்து கொண்டிருக்கும்போது மக்கள் தன்னுடைய இருக்கையை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Neha (@nehaaaa_8_)

ஒரு பெண், குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் அவருடைய இருக்கையை அபகரித்துக் கொண்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதனை அடுத்து நள்ளிரவில் தன்னுடைய இருக்கையின் விளிம்பில் ஒரு ஆண் அமர்ந்திருக்கும் பயங்கரமான வீடியோ ஒன்றையும் பகிர்ந்து உள்ளார். அதாவது அதிகாலை 4 மணி அளவில் தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆண் தனக்கு அருகில் தூங்க முயற்சித்ததாகவும் அந்த பெண் பகிர்ந்து கொண்டார்.