கேரள மாநிலம் காணக்காரி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ்(59). மனைவி ஜெஸ்ஸி சாம்(49). இந்த தம்பதியினருக்கு 28 வயதில் ஒரு மகளும், 25 மற்றும் 23 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களது பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர். மகாத்மா காந்தி பல்கலைகழகத்தில் படித்து வரும் ஜார்ஜுக்கு சில வெளிநாட்டு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அடிக்கடி வெளிநாட்டு பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் உள்ள மகள் ஜெஸியை செல்போன் மூலம் அழைத்துள்ளார். அவர் அழைப்பை ஏற்காததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி நேற்று முன்தினம் போலீசார் ஜெஸியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு கணவன் மனைவி இருவருமே இல்லை.
இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது செப்புக்குளம் பகுதியில் 50 அடி பள்ளத்தாக்கில் ஜெஸியின் உடல் கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரித்த போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவருக்கு உடந்தையாக இருந்த ஜார்ஜின் ஈரான் நாட்டு காதலியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…