பெங்களூரில் வசித்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்துள்ளது. மென்பொருள் பொறியாளரான பாலமுருகன் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலையின்றி இருந்த நிலையில், அவரது மனைவி புவனேஸ்வரி யூனியன் வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
கணவனின் சந்தேகப் புத்தியால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி, தனது இரண்டு குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததோடு, கடந்த வாரம் விவாகரத்து கோரி நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தன்னை விட்டு மனைவி நிரந்தரமாகப் பிரிந்து விடுவார் என்ற கோபத்தில், புவனேஸ்வரி வேலை முடிந்து வீடு திரும்பும் போது பாலமுருகன் அவரை வழிமறித்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புவனேஸ்வரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த பயங்கரச் செயலுக்குப் பின் பாலமுருகன் காவல் நிலையத்தில் தானாகவே முன்வந்து சரணடைந்தார். தம்பதியினரின் இந்த மோதலால் அவர்களின் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…