ஐயா..! “தினமும் வீட்டில் பல ஆண்கள்”… என் மனைவியும், மாமியாரும் அந்த தொழில் செய்யுறாங்க… காவல் நிலையத்தில் கணவர் பரபரப்பு புகார்…!!

By Soundarya on தை 23, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பதாயுனில், தனது மனைவி மற்றும் மாமியார் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி கணவர் ஒருவர் காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தன்னை அடித்து வீட்டை விட்டு விரட்டிவிட்டதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். தற்போது தனது மனைவியும் அவரது தாயாரும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசித்து வருவதாகவும், அங்கு அவர்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அடிக்கடி அந்த வீட்டிற்கு வரும் மர்ம நபர்களின் நடமாட்டத்தால் அக்கம் பக்கத்தினரும் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கணவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இந்த அவதூறான தொழிலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் நீதிக்காகப் போராடி வருகிறார். இது தொடர்பான ஆதாரங்களாகச் சில சிசிடிவி  காட்சிகளும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தப் புகாரின் அடிப்படையில் பதாயுன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.