பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சோபா தேவி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். ஜானி போரில் இவர் தன்னுடைய கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இப்படியான நிலையில் நேற்று மாலை திடீரென சோபா தேவியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அந்த நேரம் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அஞ்சலி மற்றும் அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளையும் தீ வைத்த எரித்துள்ளனர்.
இந்த கொடூரமான சம்பவத்தில் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலே துடி துடித்து உயிரிழந்தன. உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
