தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள நந்தி காமாவில் 40 வயது பள்ளி ஆசிரியர் ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த ஆசிரியரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்த புகைப்படத்தில் தெரிகின்றன.
இது தொடர்பான புகாரில் ஆசிரியர் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குழந்தை திருமண சட்டத்தின்படி பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டபூர்வ வயது என்ற தெளிவாக குறிப்பிடப்படுகிறது. இருந்தாலும் பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
