கணவனை வசியப்படுத்தச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கோவிலில் சாமியார் செய்த இழிவான செயல்… வைரலான வீடியோவால் அம்பலமான உண்மை..!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

சுலேகா என்ற பெண் திருமணமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் கைவிடப்பட்டார். தனது கணவரை மீண்டும் தன்வசப்படுத்தவும், நல்வழிக்குக் கொண்டு வரவும் அவர் ஒரு மாந்திரீக பாபாவை அணுகியுள்ளார். அந்த பாபா, கணவரை வசியப்படுத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தனது குடிலுக்கு வந்து பூஜைகளும் சடங்குகளும் செய்ய வேண்டும் என்று சுலேகாவிடம் கூறியுள்ளார்.

கணவரை மீட்டெடுக்கும் நம்பிக்கையில் சுலேகாவும் அந்த பாபா கூறிய சடங்குகளைச் செய்து வந்துள்ளார். ஆனால், சில நாட்கள் பூஜைகளுக்குப் பிறகும் அவரது கணவர் கட்டுப்படவில்லை; மாறாக, சுலேகாவே அந்த பாபாவின் முழு கட்டுப்பாட்டிற்குள் சிக்கியுள்ளார். கர்ம வினைகளைக் கழிப்பதாகக் கூறி, அந்தப் பெண்ணைக் கோவிலுக்கு வரவழைத்து பாபா இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, கோவிலில் நடந்த இந்த அத்துமீறல் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்தே, ஆன்மீகத்தின் பெயரால் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.