சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வி, கட்சியில் ஏற்பட்ட பிளவு மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அவரது சொந்த மாவட்டமான கோவையிலேயே அதிருப்தி குரல்கள் எழுந்து வருவது போன்ற காரணங்களால், தற்போது சுமுகமற்ற சூழலே நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எஸ்.பி.வேலுமணிக்குத் தூது அனுப்பியதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
இருப்பினும், அண்ணாமலையின் இந்த அழைப்பு குறித்து வேலுமணி உடனடியாக எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. தற்போதைக்கு அதிமுகவிற்குள்ளேயே தனக்கு ஏற்பட்டுள்ள மனக்கசப்புகளைச் சரிசெய்து, கட்சியில் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ளவே அவர் திட்டமிட்டுள்ளார். ஒருவேளை அதிமுகவிற்குள் சுமூகமான தீர்வு காண முடியாத பட்சத்தில் மட்டுமே, அண்ணாமலையின் அழைப்பை அடுத்தகட்டமாகப் பரிசீலிக்கலாம் என்ற முடிவில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
