அடியே… இங்க உன்னை என்ன பண்றோம் பாரு… அரசு அலுவலக அறையில்… பெண் வழக்கறிஞருக்கு நடந்த பயங்கரம்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

By Swetha on ஐப்பசி 11, 2026

Spread the love

அசாம் மாநிலம் குவகாத்தி அருகில் உள்ள அஜாரா வருவாய் வட்ட அலுவலகத்தில் , பெண் வழக்கறிஞர் அனிந்திதா தாஸ் என்பவர் சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அலுவலக அறைக்குள் நிகழ்ந்த இந்த மோதலின் போது, அந்த பெண் வழக்கறிஞர் சுவரோரமாகத் தள்ளப்பட்டு அங்கிருந்தவர்களுடன் போராடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

பெண்கள் மற்றும் சட்டப் பணியாளர்கள் பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ‘ரைஜோர் தல்’ கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான அகில், அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

   

பொதுமக்களுக்கு நீதி வழங்க வேண்டிய ஒரு அரசாங்க அலுவலகத்திலேயே பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதால், இப்பகுதியில் தற்பொழுது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.