மீரட்டில் குடிபோதையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நின்றுகொண்டிருந்த ஆசிரியர் ஒருவரின் காரின் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
விபத்துக்குப் பிறகு குடிபோதையில் இருந்த ஓட்டுநர் தலைகீழாகக் கவிழ்ந்த காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டார். வெளியே வர முடியாமல் தவித்த அவரை மீட்க உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று திரண்டனர். பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மிகுந்த சிரமத்திற்கிடையில் காரை நேராக நிறுத்தி, உள்ளே சிக்கிய ஓட்டுநரை மீட்டனர்.
https://twitter.com/ArunAzadchahal/status/2108770433604764012/video/1
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் உடனடியாகப் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மீரட் காவல்துறையினர் தீவிரமாகத் நடத்தி வருகின்றனர்.
