திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரான சதாம் உசேன், அதே பகுதியைச் சேர்ந்த யாஸ்மின் என்ற 19 வயது இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இந்த இளம் ஜோடி, திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கணவன்-மனைவி எனக் கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி மாலை யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே சதாம் உசேன் தனது நண்பரான ஷேக் அப்துல்லாவின் உதவியோடு யாஸ்மினை திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் யாஸ்மின் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிரவைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. காதலனை நம்பி வந்த யாஸ்மினுக்கு, சதாம் உசேனும் அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவும் இணைந்து ‘டெபன்டாடல்’ (Tapentadol) என்ற போதை மாத்திரையைக் தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளனர். அளவுக்கு அதிகமான போதை மருந்து உடலில் ஏறியதே இளம்பெண்ணின் மரணத்திற்குப் பிரதான காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட விடுதி அறைக்குச் சென்ற போலீசார், அங்கிருந்து 70 போதை மாத்திரைகள், ஊசி, மருந்து கலக்கப் பயன்படுத்தப்பட்ட டீ கப்புகள் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை முக்கிய ஆதாரங்களாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது காதலன் சதாம் உசேன் மற்றும் அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, உயிரிழந்த யாஸ்மினின் தாயார் ஷகிலாபேகம் போதை மாத்திரை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்தவர் என்றும், அவர் மூலமாகவே இந்த மாத்திரைகள் கைமாறியிருக்கலாம் என்றும் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. யாஸ்மின் பலாத்காரம் செய்யப்பட்டாரா, கொலை செய்யும் நோக்கில் இந்த ஊசி செலுத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…