“அண்ணாமலையா? விஜய்யா?”… அரசியலில் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்?…. ஜூன் 11-ல் வெளியிடப்போகும் அந்த ரகசியம் இதுதான்… கசிந்த முக்கிய தகவல்…..!

Spread the love

தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் தற்போதைய ஹாட் டாபிக் ராகவா லாரன்ஸ் தான். கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் அவர் அரசியல் எண்ட்ரி கொடுக்கப்போகிறார் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் லாரன்ஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் அரசியல் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், வரும் ஜூன் 11-ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது இந்த சஸ்பென்ஸை இன்னும் அதிகரித்துள்ளது.

ராகவா லாரன்ஸ் வெறும் கமர்ஷியல் நடிகர் மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இருக்கும் அவரது மனிதநேயப் பண்புதான் அவரை மக்களிடம் நெருக்கமாக்கியுள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் பேசுகையில், “கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்கள் மத்தியில், தன்னிடம் இருக்கும் பணத்தை ஏழைகளுக்கு வாரி வழங்கும் குணம் லாரன்ஸிடம் மட்டுமே உண்டு” என்று பாராட்டியுள்ளார். மேலும், ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் நிஜக் கதாநாயகி பார்வதி அம்மாளுக்கு நேரில் சென்று இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி, வீடு கட்டித் தருவதாக உறுதியளித்து அதை நிறைவேற்றிய லாரன்ஸின் தாராள மனதை அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

அரசியல் பேச்சுகள் ஒருபுறம் இருந்தாலும், லாரன்ஸின் தீவிர ரஜினி பக்தியை யாராலும் மறுக்க முடியாது. ராமனுக்கு அனுமன் எப்படியோ, அதுபோல ரஜினிக்கு லாரன்ஸ் என்று சினிமா வட்டாரங்களில் சொல்வதுண்டு. சூப்பர் ஸ்டாரை யாராவது விமர்சித்தால், சினிமா துறையிலிருந்து முதன்முதலாக குரல் கொடுப்பவர் லாரன்ஸ் தான். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை கடுமையாக விமர்சித்தபோது, அவருக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பை பதிவு செய்தவர் இவர். தன் குருவாகவும், வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் ரஜினிகாந்தையே லாரன்ஸ் எப்போதும் முன்னிறுத்தி வந்துள்ளார்.

மறுபுறம், அண்மையில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்யை லாரன்ஸ் பாராட்டிப் பேசியதும் இந்த அரசியல் யூகங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்க வேண்டும்” என்று கூறிய லாரன்ஸ், சினிமா துறையில் தனக்கிருக்கும் ஒரே நல்ல நண்பர் விஜய் தான் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் தவெகவில் அவர் இணையலாம் என்ற பேச்சு வலுவடைந்துள்ளது. அதே நேரத்தில், அவர் அண்ணாமலை தலைமையிலான பாஜாக தரப்பில் இணையவும் வாய்ப்புள்ளதாக அரசியல் அரங்கில் மற்றொரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

இருப்பினும், இந்த விவகாரங்களில் லாரன்ஸ் இதுவரை நேரடியாக எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காப்பதுதான் விவாதத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது. “நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஒரே வரியில் மறுத்திருக்கலாம், ஆனால் ஜூன் 11 அன்று முக்கிய அறிவிப்பு என்று சொல்வதில் ஏதோ ஒரு சஸ்பென்ஸ் ஒளிந்திருக்கிறது” என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். லாரன்ஸ் தவெகவில் இணைவாரா, அண்ணாமலையுடன் கைகோர்ப்பாரா அல்லது தனது சமூக சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல புதிய அமைப்பைத் தொடங்குவாரா என்ற அனைத்துக் கேள்விகளுக்கும் ஜூன் 11-ல் விடை கிடைத்துவிடும் என்பதால் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Nanthini

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்..! 50 மீட்டர் தொலைவில் போலீஸ்… சிதறிய தோட்டாக்கள்… அடுத்தடுத்து பலியான தந்தை – மகன்.. உ.பி-யில் பரபரப்பு…!!

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…

7 மணத்தியாலங்கள் ago

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்… அண்ணாமலையுடன் இணையும் ராகவா லாரன்ஸ்..? அதிர்ச்சியில் விஜய்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும்,…

7 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: சிறுமியாக இருந்தபோது தொடங்கிய பாலியல் தொல்லை.. 60 வயது முதியவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…

8 மணத்தியாலங்கள் ago

“கழிப்பறையில் அடைத்து வைத்து.. 7 வயது சிறுமியை சீரழித்த வெறிச்செயல்..! 13 வயது சிறுவர்களா இப்படி..? வங்கதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!”

வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…

8 மணத்தியாலங்கள் ago

குடிபோதையில் வந்த வினை… நண்பனுடன் ஏற்பட்ட தகராறில்… இளைஞர் அடித்துக் கொலை.. மூன்று நாட்கள் கழித்து அம்பலமான விபத்து நாடகம்… சிக்கியது எப்படி…?

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை … நம்பி வந்த வடமாநில பெண்ணின் கதறல்…!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…

9 மணத்தியாலங்கள் ago