மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான பரத் விஸ்வகர்மா என்பவர், சம்மானா கிராமத்தில் உள்ள தனது சகோதரியைச் சந்தித்துவிட்டு பைக் மூலமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், அவருக்கும் குட்டா படேல் என்பவருக்கும் இடையே எவ்வித முன்விரோதமும் இல்லாத நிலையில், எதிர்பாராத விதமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திடீரென குட்டா படேல் என்ற நபர், பைக்கில் சென்று கொண்டிருந்த பரத் மீது இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் நிலைதடுமாறி பரத் கீழே விழுந்தார்.
அதன் பிறகும் தாக்குதலை நிறுத்தாத குட்டா படேல், வீட்டிற்குள் இருந்து இரும்புச் சுத்தியலை எடுத்துவந்து, கீழே விழுந்து கிடந்த பரத்தின் தலையில் பலமாகத் தாக்கி மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்தார்.
