இந்தத் சோகமான சம்பவம் மனிதநேயமற்ற அலட்சியத்தின் கொடூரமான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 85 வயதான மூதாட்டி ஷீ சாங்யிங் , கடும் குளிரில் பனியிலும் காற்றிலும் உறைந்து உயிருக்குப் போராடியபோது, தான் பெற்ற நான்கு மகன்களாலும் கைவிடப்பட்டு உயிரிழந்தார். சுழற்சி முறையில் தாயைக் கவனித்துக் கொள்ளும் ஒப்பந்தத்தை காரணம் காட்டி, ஒவ்வொரு மகனும் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தனர். தன் மகன்களின் வீடுகளுக்கு இடையே அலைந்து திரிந்து, இறுதியாக வாசற்படியிலேயே இரத்தக் கறைகளுடன் உறைந்துபோன அந்தத் தாயைக் காப்பாற்ற, சுவரின் மறுபக்கம் கதகதப்பான படுக்கையில் இருந்த எந்தவொரு மகனுக்கும் மனமும் வரவில்லை, கருணையும் பிறக்கவில்லை.
கிராமப்புற பாரம்பரியம் மற்றும் “மகன்கள்தான் தாயைப் பராமரிக்க வேண்டும்” என்ற வீண் பெருமைக்காக, மகள்கள் அந்தத் தாயை அன்போடு வளர்க்க முன்வந்தும் மகன்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனால் நடைமுறையில், தாயை ஒரு பாரமாகவே கருதி உணவோ புகலிடமோ தராமல் வீதியில் விட்டனர். உயிருக்குப் போராடிய கடைசித் தருணத்தில், அந்த மூதாட்டி தன் மகன்களின் சிறுவயது பெயர்களைச் சொல்லி கதறியழுதும், மகன்களும் மருமகள்களும் அதைக் கேட்டும் கேட்காதது போல் தூங்கினர். ஊரே கொந்தளித்த இந்தச் சம்பவத்தில், பெற்ற தாயைக் கொடூரமாகச் சாகடித்த அந்த மகன்களுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
https://twitter.com/blackym25/status/2109509888762347721/video/1
சட்டமும் நீதிமன்றமும் அந்த நான்கு மகன்களுக்குத் தண்டனை வழங்கியிருந்தாலும், அது உறைந்துபோன அந்தத் தாயின் உயிரை மீண்டும் கொண்டுவந்துவிட முடியாது. பெற்ற பிள்ளைகளைத் தன் ரத்தமும் சதையுமாக வளர்த்தெடுத்த ஒரு தாய்க்கு, வாழ்வின் இறுதியில் கிடைத்த இந்த அநீதியும் துரோகமும் மனித சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு ஆறாத வடுவாகும். பேரம் பேசும் சுயநலமும் போலி கௌரவமும் எவ்வாறு பெற்ற தாயையேக் கொல்லும் கொடூரத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு கசப்பான சான்றாகும்.
கேரள மாநிலம் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் 55 வயதான ஜெயபாலகிருஷ்ணன் என்ற நபர் பரிதாபமாக…
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…
நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட…
தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சியின் தலைமை மீதும் அண்மையில் பொறுப்புக்கு வந்த…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச்…