ஐயோ கடவுளே… கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பிடித்த கார்… கம்மம் பிரபல நரம்பியல் மருத்துவர்… கருகி சாம்பலான கொடூரம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 21, 2026

Spread the love

கம்மத்தைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் கே. ஜெகதீஷ் பாபு, ஞாயிற்றுக்கிழமை காலை தனது காரில் கம்மத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். காலை 7.15 மணியளவில் சூரியபேட்டை மாவட்டம் பிள்ளலமர்ரி அருகே தேசிய நெடுஞ்சாலை 365BB-இல் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

உறக்கமின்மை காரணமாகவே கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மோதிய சில நிமிடங்களிலேயே கார் பயங்கரமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியதால், காரினுள்ளே சிக்கிய மருத்துவர் ஜெகதீஷ் பாபு உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

   

https://twitter.com/HateDetectors/status/2101961115265847443/video/1

   

தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடல் கடுமையாகக் கருகியிருந்ததால் தொடக்கத்தில் அடையாளத்தைக் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், அவர் கம்மத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் என்பது உறுதிசெய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்காக உடல் சூரியபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விபத்து குறித்து மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.