திடீர் வெள்ளப்பெருக்கு…! சீறிப்பாய்ந்த காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6 பேர்… மாயமான இளம்பெண்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 21, 2026

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் உள்ள கோட்டப்புழா ஆற்றில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாகக் காட்டாற்று வெள்ளம் திடீரெனச் சீறிப்பாய்ந்தது. இதில் ஆற்றில் இறங்கிய 6 பேர் எதிர்பாராதவிதமாக அடித்துச் செல்லப்பட்டனர்.

திங்கட்கிழமை தேசிய பேரிடர் மீட்புப் படை , தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில், மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

   

அடுத்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சஜிதா (26) என்ற பெண் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதால், அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலையோர வனப்பகுதியில் சில நிமிடங்களில் பெய்த கனமழையே இந்தத் திடீர் வெள்ளப்பெருக்குக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.