ஐயோ கடவுளே… தொழில் தொடங்குமாறு கூறியதால் நேர்ந்த சோகம்… அண்ணனை தம்பி வெட்டி கொன்ற கொடூரம்… குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 8, 2026

Spread the love

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத் தம்பியே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று இரவு தொழிலாளியான ரஞ்சித் பவார் (26), தனது மூத்த சகோதரர் கஜேந்திராவுடன் (28) உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது குடும்பத்திற்கு நிதியுதவி செய்து வந்த ரஞ்சித், வேலையின்றி இருந்த கஜேந்திராவை ஏதேனும் தொழில் தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

   

இந்த பேச்சுவார்த்தை திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறி, கைக்கலப்பாக உருவெடுத்தது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித், அருகில் இருந்த கோடரியை எடுத்து கஜேந்திராவை பலமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் ரஞ்சிதை கைது செய்து, வழக்கின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.