ஐயோ பாவம்… என் பையன் என்ன தப்பு பண்ணான்?… அரசுப் பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலியான கொடூரம்… தாய் கதறல்… ஆந்திராவில் சோகம்…!

By Swetha on ஆவணி 18, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேசத்தின் மான்யம் மாவட்டம், சாலூர் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த அருண் தேஜ் என்ற 14 வயது மாணவர், பள்ளி வளாகத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான பகுதியிலோ அல்லது விபரீதமான செயல்களிலோ ஈடுபடாமல், பாதுகாப்பாக இருக்க வேண்டிய தன் பள்ளியிலேயே அந்த மாணவர் உயிரையிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளிகளின் போதிய பராமரிப்பின்மையும் மோசமான உள்கட்டமைப்புமே இந்த துயரச் சம்பவத்திற்குக் காரணம் என உள்ளூர் மக்களும் பெற்றோர்களும் கொதித்தெழுந்துள்ளனர். படிக்கும் வயதில் தன் மகனைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும அந்தத் தாயின் கதறலுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதையும் உலுக்குகிறது. பள்ளிக் குழந்தைகள் இருக்கும் இடத்தில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கத் தவறிய அதிகாரிகளின் அலட்சியமே இத்தகைய அசம்பாவிதத்திற்குக் காரணமாக அமைகிறது.

   

https://twitter.com/revathitweets/status/2089335239818842511/video/1

   

இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு மாணவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். பள்ளிச் சுவர்கள் பராமரிப்பின்றி இடியும் நிலையில் இருந்தது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்படாமல் இருந்ததே இந்தத் துயரத்திற்கு வழிவகுத்துள்ளது. அரசு மற்றும் கல்வித் துறை உடனடியாக இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பையும் ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.