நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றின் வால் பகுதியில் இருந்த ‘டெயில் ரோட்டார்’ அமைப்பில் திடீரென ஏற்பட்ட மெக்கானிக்கல் பழுது காரணமாக, அதன் திசைக் கட்டுப்பாடு முற்றிலும் இழக்கப்பட்டு ஹெலிகாப்டர் வான்வெளியில் அதிவேகமாகச் சுழலத் தொடங்கியது. நொடிப் பொழுதில் கட்டுப்பாட்டை இழந்து சுழன்ற அந்த ஹெலிகாப்டரைச் சமயோசிதமாகச் செயல்பட்ட விமானிகள், ஆபத்தான சூழலிலும் சுழற்சியைக் கட்டுப்படுத்திப் பத்திரமாகத் தரையிறக்கி அசத்தியுள்ளனர்.
முக்கிய பாகத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் சில நொடிகளில் பெரும் ஆபத்தாக மாறிய இந்த வான்வழி விபத்தில், விமானிகளின் அதிரடி சுதாகரிப்பால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அனைவரும் உயிர்தப்பினர். இச்சம்பவத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
