திக்… திக்… இறந்த நண்பன் தினமும் கனவில் வந்து துரத்திய கோர பயம்… 20 நாட்களுக்குப் பிறகு குற்ற உணர்ச்சியால்… போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த நபர்… மகராஷ்டிராவில் நடந்த சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 4, 2026

Spread the love

நண்பரைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபர் ஒருவர், தொடர்ந்து தன் கனவில் இறந்த நண்பர் வந்து பயமுறுத்தியதால், குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் 20 நாட்களுக்குப் பிறகு காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் தகராறு காரணமாக இக்கொலை நடந்துள்ளது. கொலையைச் செய்த பிறகு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகக் குற்றவாளி பல்வேறு இடங்களுக்குச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

   

ஆனால், தலைமறைவாக இருந்த 20 நாட்களும் இறந்த நண்பர் தினமும் தன் கனவில் வந்து துரத்துவது போன்றும், கேள்விகள் கேட்பது போன்றும் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் பயத்தின் காரணமாக, வேறு வழியின்றி அவரே நேரடியாகக் காவல் நிலையம் சென்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.