“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த கணவனைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் விகாஸ் நகரைச் சேர்ந்த ரவீந்தர் சிங் மற்றும் அவரது மனைவி கமல்தீப் கவுர் (49) ஆகிய தம்பதியினர் கடந்த 6 மாதங்களாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைதான் இவர்கள் இருவரும் இந்தியா திரும்பியுள்ளனர்.

   

சனிக்கிழமை மாலை கணவர் ரவீந்தர் சிங் தனது மகன் ககன்தீப் சிங்கை ஒரு வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து மகன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, தாய் கமல்தீப் கவுர் படுக்கையறைத் தரையில் இரத்த வெள்ளத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

   

தாய்க்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகத் தந்தை சந்தேகப்பட்டதாகவும், அதுவே கொலைக்குக் காரணம் என்றும், கொலையைச் செய்துவிட்டு இரத்தம் படிந்த கத்தியைத் தந்தை கழுவி வைத்துவிட்டு நாடகமாடியதாகவும் மகன் குற்றம் சாட்டினார். இச்சம்பவம் குறித்துத் துக்ரி காவல் நிலைய போலிஸார் வழக்குப் பதிவு செய்து கொடூரக் கணவன் ரவீந்தர் சிங்கைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.