“நேபாள வெள்ளத்தில் நிமிர்ந்து நின்ற பச்சை நிற வீடு…” அட்டை பெட்டி போல இடிந்த கட்டடங்களுக்கு இடையே அதிசயம்… காரணம் இதுதான்… சுவாரஸ்ய பின்னணி இதோ…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

நேபாளத்தில் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட கொடூர வெள்ளப்பெருக்கின் போது, கரை ஓரத்தில் இருந்த பிரம்மாண்ட கட்டடங்கள் அனைத்தும் சீட்டுக்கட்டு போல நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு பச்சை நிற வீடு மட்டும் வெள்ளத்தை எதிர்த்து நிமிர்ந்து நின்ற சம்பவம் உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

அந்த வீட்டின் 2 மற்றும் 3-வது மாடி பால்கனியில் ஒரு சிறுமி மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிருக்குப் போராடியபடி நின்றுகொண்டிருந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. வெள்ள நீர் குறைந்த பிறகு நேபாள ராணுவத்தினர் அங்குச் சென்று பால்கனியில் தவித்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்தக் கட்டடம் தப்பியதன் பின்னணியில் எந்தவொரு அற்புதமும் இல்லை, மாறாகச் சரியான பொறியியல் தொழில்நுட்பமே காரணம் என்பது தெரியவந்துள்ளது. வலுவான இரும்புக் கம்பிகள் மற்றும் கான்கிரீட் கொண்டு கட்டப்பட்டிருந்ததும், தரைதளத்தில் இருந்த சேமிப்புக் கிடங்கின் கதவுகள் உடைந்து வெள்ள நீர் எளிதாகக் கடந்து சென்றதால் கட்டடத்தின் முக்கியத் தூண்களுக்கு அழுத்தம் குறைந்து இந்தக் கட்டடம் தப்பியதற்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.