“என்னை கூட்டிட்டு போய் அநாதை ஆசிரமத்துல விட்ருப்பா” என்று ஒரு வயதான மூதாட்டி கண்ணீருடன் நபர் ஒருவரிடம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரின் இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. தனது சொந்தக் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் அல்லது பாரமாக நினைக்கப்படும் சூழலில், அந்தப் பாட்டி ஆற்றாமையுடன் பேசும் இந்த காட்சிகள், இன்றைய காலக்கட்டத்தில் முதியோர்கள் சந்திக்கும் துயரத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது.
“என்ன கூட்டிட்டு போய் அணாதை அசிரமத்துல விட்ருயா”ன்னு அந்த பாட்டி சொல்லும் போது 🥹😰😢
எப்படியே அந்த பாட்டியா காப்பாத்திருக்கார் எப்படின்னு பாருங்க 🥰✨🥹
நீங்களும் இப்படி ஆதரவு இல்லாதவங்கள பாக்கும் போது உதவுங்க 👍👍👍 pic.twitter.com/oa4sg6OCPP
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) January 19, 2026
இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் இணையவாசிகள், பெற்றவர்களை பாரமாக நினைக்கும் பிள்ளைகளுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “பெற்ற கடனைத் தீர்க்க வேண்டிய வயதில், அவர்களை அநாதை ஆசிரமத்திற்கு அனுப்பும் மனநிலை கொடுமையானது” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியான மற்றும் வேதனையான வீடியோ, முதியோர் பாதுகாப்பு குறித்துச் சமூகத்தில் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
