இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் வழங்கும் தமிழக அரசு… யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. எப்படி விண்ணப்பிப்பது?.. இதோ முழு விவரம்..!

By Divyamayakannan on ஆவணி 28, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறது. முதலமைச்சரின் உழவர் நலசேவை மையங்கள் என்று புதியமுயற்சி ஒன்றை எடுத்துள்ளது அரசு. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சிக்காக விவசாயிகளின் நலனையும், இளைஞர்களின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டே இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 20 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பட்டதாரி ஆண்கள் , பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் இத்திட்டம் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும்.

விவசாயத்திற்கு தேவையான விதை, உரம் ,பூச்சிக்கொல்லி , நவீன தொழில்நுட்பம் போன்றவற்றை மத்திய , மாநில அரசு அறிவுரைப்படி சேவை மையங்களை நடத்துவதற்கு நிதி உதவி கிடைக்கும். ரூபாய்  10 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு மத்திய அரசு முப்பது சதவீதம் மானிய உதவியை வழங்கி வருகிறது. மானியமாக ரூபாய் 6 லட்சம் வரை வழங்கப்படும். மையத்தை நிறுவ விரும்புவோருக்கு பயிற்சிகள் வழங்கப்படும். வணிகம் நடத்தும் திறன்களை வளர்க்கவும், விவசாயிகளுடன் தொடர்பு கொள்ளவும் கற்றுத்தரவும் அரசு முன்னெடுப்பு எடுத்துள்ளது.

   

https://www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/register மற்றும் QR code இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் என்பது பட்டதாரிகளுக்கும். விவசாயிகளுக்கும் பெரிய நம்பிக்கையாக திகழும்.