தூய அரசியலுக்கு சொந்தக்காரரான நல்லக்கண்ணுவின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை நேற்று இரவு பின்னடைவை சந்தித்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
