இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் கேமியோ ரோலில் அமீர்கான் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தில் இருந்து சிகுடு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்த படத்தில் டி ராஜேந்திரனை பயன்படுத்தலாம் என்று லோகேஷ் கனகராஜுக்கு எண்ணம் வந்துள்ளது.
இதனால் ரஜினியிடம் சென்று டி.ஆர் ஐ பயன்படுத்தலாம் என்று கூறிய போது, “அவருக்கு உடம்பு சரியில்லாமல் உள்ளது. இந்த நேரத்தில் எப்படி டான்ஸ் ஆடுவார்?” என்று கேட்டிருக்கிறார் ரஜினி. ஆனால் டி ராஜேந்திரன் ரஜினிக்காக நான் எதையும் செய்வேன் என்று சொல்லி சம்மதித்து இந்த பாடலில் நடனம் ஆடினாராம். முன்பு பிரபல கட்சி ஒன்றிலிருந்து ரஜினிக்கு எதிர்ப்பு வலுவாக இருந்தபோது ரஜினிக்கு தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்திருக்கிறார் டி ஆர். இப்படி ஒரு நட்பு இருவருக்கும் இடையே இருந்து வருவதாக கூறியிருக்கிறார் பாலாஜி பிரபு.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…
சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…