புதுச்சேரி மாநிலம் முத்தியால்பட்டியை சேர்ந்தவர் பார்த்திபன்(31). இவர் கடந்த 2022-ஆம் வருடம் கீர்த்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த நிலையில் கீர்த்திகா சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் தன்னுடைய தாய் மாமன் சதீஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். பிறகு நானும் என்னுடைய கணவரும் உங்களோட வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் சதீஷ் வீட்டிற்கு செல்லாமல் ஏரிக்கரைக்கு சென்றுள்ளார்கள். பிறகு தாங்கள் இருவரும் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார்கள் .
சிறிது நேரம் கழித்து சதீஷ் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள் நானும், என்னுடைய கணவரும் விஷம் குடித்து விட்டதாக கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்கள். பிறகு அவர்களை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார். ஆனால் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். உயிரிழந்த கணவன் மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத இயக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…